சமஸ்க்ருதத்தில் மெய்யெழுத்துக்களை வ்யன்ஜன என்பார்கள். தமிழ் போல உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதி சமஸ்க்ருதத்திலும் உண்டு. கூடுதல் விதியாக சம்ஸ்க்ருதத்தில் மெய்யெழுத்துக்கென்று தனியே உச்சரிப்பு கிடையாது. மெய்யெழுத்து ஸ்வரத்துடன் சேர்ந்து உயிர்மெய்யாகவே உச்சரிக்கப்படும்.
ஒரு உதாரணம் பார்போம்.
क्(க்) என்ற மெய்யெழுதிற்கென்று தனியே உச்சரிப்பு கிடையாது ஆனால் ச்வர(உயிர்)ஆகிய अ(அ)உடன் சேர்ந்து क(க) என்ற உயிர்மெய் ஆகிறது.
தமிழில் உயிரெழுத்தைக் குறிக்க புள்ளியை உபயோகப்படுத்துவது போல சம்ஸ்கிருதத்தில் அந்த எழுத்தின் அடியே ஒரு கோடு இழுத்து குறிப்பிடுவார்கள். இதனை ஹலந்த் என்பார்கள். இதனை நாம் क्(க்) என்ற இந்த எழுத்தின் கீழ் கானலாம்.
நாம் தற்பொழுது ஒரு முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.
தமிழில் மெய்யெழுத்துக்களின் உச்சரிப்பு வார்த்தைகளுக்கு ஏற்பட மாறும். 'பக்கம்' என்ற சொல்லில் உள்ள க உச்சரிப்பிற்கும் 'பகல்' என்ற சொல்லில் உள்ள க உச்சரிப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாம் தாய்மொழியாக தமிழை பேசி வருவதால் நமக்கு எந்தெந்த இடங்களில் மெய்யெழுத்துக்களை எப்படி உச்சரிப்பது என்பது நமக்கு தண்ணீர் பட்டப்பாடு. தொல்காப்பியத்தில் இதற்கான இலக்கண விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஆனால் மற்ற இந்திய மொழிகள் அனைத்திலும் ஒவ்வொரு மெய்யெழுத்திற்கும் ஒவ்வொரு ஒலி இருக்கிறது. எழுத்துக்களின் படியே ஒலியும் உச்சரிக்கப்படுகிறது. சம்ஸ்கிருத வ்யஞ்சனங்களிலும் நாம் இதை காணலாம்.
சமஸ்கிருதத்தில் மெய்யெழுத்துக்களை ஒரு சீர்படி வரிசைப்படுத்தியுள்ளனர். இதனை நாம் க வர்கம், ச வர்கம், த வர்கம், ப வர்கம், ட வர்கம் , அநுநாஸிக எழுத்துக்கள், இதர எழுத்துக்கள் எனக்கொள்ளலாம். க வர்கத்தில் ka,kha,ga,gha என்ற உச்சரிப்புகள் உடைய ககரத்திற்கான எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதே போல ச,ப,த,ட வர்கத்திலும் நாம் உச்சரிப்புகளுக்கேற்ற எழுத்துக்களை கானலாம்.இதை தமிழில் நாம் எப்படி குறிப்பது? ஒவ்வொரு வர்கத்தின் ஒலிகளை குறிக்க தமிழில் உள்ள அந்த வர்கத்தின் பிரதான எழுத்தின் மேல் 1,2,3,4 என்று எண்கள் இட்டு நாம் ஒவ்வொரு வர்க்கத்திலும் உள்ள வடமொழி எழுத்துக்களை தமிழில் குறித்துக்கொள்வோம். உதாரணம் ka,kha,ga,gha போன்ற க வர்க உச்சரிப்புகளை முறையே க¹,க²,க³,க4 என்று குறித்துக்கொள்வோம். இதே போல எல்லா வர்கத்திற்கும் குறித்துக்கொள்வோம்.
இது தவிர மூக்கால் ஒலிக்கப்படும் அநுநாஸிக எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வர்கத்தின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ளன. அது ஏன் என்பதை நாம் பிறகு கானலாம்.
இப்பொழுது ஒவ்வொரு வர்கமாக காண்போம். மெய்யெழுத்துடன் அகரத்தை சேர்த்து உயிர்மெயெழுத்தாக நாம் உயிரெழுத்துக்களை காண்போம், ஏனெனில் உயிரெழுத்துகளுக்கு தனியே உச்சரிப்பு இல்லை.
க வர்கம்
இந்த வர்கத்தில் உள்ள எழுத்துகள் தொண்டையிலிருந்து எழும்பும் ஒலியை ஆதாரமாக கொண்டுள்ளன. இந்த வர்கத்தின் எழுத்துக்களை பார்ப்போம்
சம்ஸ்க்ருத வ்யன்ஜனம் | தமிழ் மெய் | ஆங்கில உச்சரிப்பு | உதாரணம் | ஒலி | எழுதும் முறை |
क | க¹ | ka | கல்லூரி, கண்ணீர் | ![]() | ![]() |
ख | க² | kha | காஜா,கரகோஷம், கந்துவட்டி,காபந்து | ![]() | ![]() |
ग | க³ | ga | பலகை, பகல்,கெட்டி | ![]() | ![]() |
घ | க4 | gha | கணீர், கண்டம் | ![]() | ![]() |
ङ | ங | nga | பங்கு, வங்கி | ![]() | ![]() |
ख தமிழில் க்க என்று உச்சரித்தால் எப்படி இருக்குமோ அந்த உச்சரிப்பை கொண்டுள்ளது.
ग ஆங்கிலத்தில் ga என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது.
घ ஆங்கிலத்தில் gha என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது.
ச வர்கம்.
இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது நாக்கு மேல் தாடையின் முன்புறத்தை தொடும், எனவே இதை தாலு(மேல் தாடையின் முன்பகுதி) என்றும் அழைக்கின்றனர். இந்த வர்கத்தின் எழுத்துக்களை பார்ப்போம்
சம்ஸ்க்ருத வ்யன்ஜனம் | தமிழ் மெய் | ஆங்கில உச்சரிப்பு | உதாரணம் | ஒலி | எழுதும் முறை |
च | ச¹ | cha | சோழர், சப்பாத்தி, சானம் | ![]() | ![]() |
छ | ச² | cha | சேரன்,சாயா ,பச்சை, உச்சம் | ![]() | ![]() |
ज | ஜ¹ | ja | ஜனநாயகம்,ஜமீந்தார் | ![]() | ![]() |
झ | ஜ² | jha | ஜார்கண்ட், ஜார்ஜ் | ![]() | ![]() |
ञ | ஞ | jna | ஞானம், ஞமலி | ![]() | ![]() |
छ தமிழில் ச்ச என்று உச்சரித்தால் எப்படி இருக்குமோ அந்த உச்சரிப்பை கொண்டுள்ளது.
झ தமிழில் ஜ்ஜ என்று உச்சரித்தால் எப்படி இருக்குமோ அந்த உச்சரிப்பை கொண்டுள்ளது.
ட வர்கம்
இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது நாக்கு மேல் தாடையின் பின்புறத்தை தொடும், எனவே இதை மூர்தா(மேல் தாடையின் பின்பகுதி) என்றும் அழைக்கின்றனர். இந்த வர்கத்தின் எழுத்துக்களை பார்ப்போம்
ठ தமிழில் ட்ட என்று உச்சரித்தால் எப்படி இருக்குமோ அந்த உச்சரிப்பை கொண்டுள்ளது
ड ஆங்கிலத்தில் da என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது
ढ ஆங்கிலத்தில் dha என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது
த வர்கம்
இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது நாக்கு பல்லினை தொடும், எனவே இதை தந்த(பல்) என்றும் அழைக்கின்றனர். இந்த வர்கத்தின் எழுத்துக்களை பார்ப்போம்
थ தமிழில் த்த என்று உச்சரித்தால் எப்படி இருக்குமோ அந்த உச்சரிப்பை கொண்டுள்ளது
द ஆங்கிலத்தில் dha என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது
ध ஆங்கிலத்தில் dhdha என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது
ப வர்கம்
இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது உதடுகள் ஒட்டும், எனவே இதை ஓஷ்ட(உதடு) என்றும் அழைக்கின்றனர். இந்த வர்கத்தின் எழுத்துக்களை பார்ப்போம்
சம்ஸ்க்ருத வ்யன்ஜனம் | தமிழ் மெய் | ஆங்கில உச்சரிப்பு | உதாரணம் | ஒலி | எழுதும் முறை |
प | ப¹ | pa | பால், பக்குவம் | ![]() | ![]() |
फ | ப² | pha | பணம், பல்லி | ![]() | ![]() |
ब | ப³ | ba | பாலாஜி,பாபா | ![]() | ![]() |
भ | ப4 | bha | பூமி, பாஷை | ![]() | ![]() |
म | ம | ma | மஞ்சள், மக்கள் | ![]() | ![]() |
फ தமிழில் ப்ப என்று உச்சரித்தால் எப்படி இருக்குமோ அந்த உச்சரிப்பை கொண்டுள்ளது
ब ஆங்கிலத்தில் bha என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது
भ ஆங்கிலத்தில் bhbha என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது
ळ இது தமிழில் உள்ள ள என்ற எழுத்தின் உச்சரிப்பை உடையது. சில இடங்களில் இது ழ கரத்தை குறிக்கவும் உபயோகிக்கப்படுகிறது
ष இது தமிழில் ஷ்ஷ என்ற உச்சரிப்பை உடையது
இப்பொழுது முழு சம்ஸ்கிருத மெய்யெழுத்துக்களையும் காண்போம். எழுத்துக்களுக்கு பக்கத்தில் அதன் தமிழ்,ஆங்கில உச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
|
|
|
|
| ||||||||||
|
|
|
|
| ||||||||||
|
|
|
|
| ||||||||||
|
|
|
|
| ||||||||||
|
|
|
|
| ||||||||||
|
|
|
|
| ||||||||||
|
|
|
|