Monday, July 13, 2009

எழுத்துக்கள் - உயிரெழுத்து

தமிழை போலவே சம்ஸ்க்ருதத்திலும் எழுத்துக்கள் உயிரெழுத்து, மெய்யெழுத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழுக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் எழுத்துமுறையில் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதை நாம் மெய்யெழுத்து பற்றி படிக்கும்பொழுது பார்க்கலாம். முதலில் நாம் உயிரெழுத்துக்களை காண்போம்.உயிரெழுத்து

உயிரெழுத்துக்களை சம்ஸ்க்ருதத்தில் ஸ்வர என்பார்கள். ஸ்வர என்றால்ஆதார சப்தம் என்று பொருள். எல்லா சப்தங்களும் இந்த ஸ்வரங்களை ஆதாரமாக கொண்டுள்ளன.சம்ஸ்க்ருதத்தில் மொத்தம் 16 ஸ்வரங்கள் உள்ளன.

கீழ்கண்ட அட்டவணையில் நாம் சமஸ்க்ருத ஸ்வரங்களையும் அதேபோல தமிழில் உள்ள எழுத்தினையும் காண்போம்
சம்ஸ்க்ருத ஸ்வரம்தமிழ் உயிர்உச்சரிப்பு உதாரணம்ஒலிகுறிப்பு
அம்மா
आ‌ஆ‌ஆடு
इ‌இ‌இலை
ई‌
ஈ‌ஈட்டி
उ‌
உ‌உணவு
ऊ‌
ஊ‌ஊசி
ऋ‌ரு‌ருதுஇந்த எழுத்து தமிழ் 'ர' விற்கும் 'ரு' விற்கும் இடைப்பட்டது. ருது, ரிஷபம், ரிஷி என்ற வார்த்தைகளில் உச்சரிக்கப்படும் ரகரைத்தப் போல இது உச்சரிக்கப்படவேண்டும்.
ॠ‌
ரூ‌
இந்த எழுத்து தமிழ் 'ர' விற்கும் 'ரூ' விற்கும் இடைப்பட்டது. ऋ ஸ்வரத்தின் நெடில் உச்சரிப்பு இது. ஆனால் நடைமுறை பேச்சுவழக்கில் இது அதிகம் உபயோகப்படுத்தப்படவில்லை.
ऌ‌லு‌
இந்த எழுத்து தமிழ் 'ல' விற்கும் 'லு' விற்கும் இடைப்பட்டது. க்ளஸ்டர் என்ற ஆங்கில சொல்லும் வரும் ளகரத்தை போன்ற உச்சரிப்பை உடையது.
ॡ‌லூ‌
இந்த எழுத்து தமிழ் 'ல' விற்கும் 'லூ' விற்கும் இடைப்பட்டது.ऌ ஸ்வரத்தின் நெடில் உச்சரிப்பு இது. இந்த எழுத்து தற்பொழுது அதிகம் உபயோகப்படுத்தப்படுவதில்லை
ए‌
ஏ‌ஏணிதமிழில் உள்ள எ போன்ற எகார குறிலெழுத்து வடமொழியில் இல்லை
ऐ‌
ஐ‌ஐவர்
ओ‌
ஓ‌ஓடம்
औ‌
ஔ‌ஔவையார்
अं‌
அம்‌
இந்த எழுத்தை அநுஸ்வரம் என்பார்கள். தமிழில் உள்ள 'ம்' என்ற எழுத்தை போன்றது இது. எப்பொழுது இந்த அநுஸ்வரத்தை உபயோகிப்பது எப்பொழுது ம் என்ற மகர எழுத்தை உபயோகிப்பது என்பதை பிறகு காணலாம்
अः‌
அஹ‌கணேசாய நமஹ‌
இந்த எழுத்தை விசர்க என்பார்கள். இதன் உச்சரிப்பு ஹ என்ற எழுத்தினைப் போல வரும். இதன் உபயோகத்தையும் நாம் பின்பு காணலாம்


ॠ‌,ॡ‌ போன்ற எழுத்துக்கள் அதிகம் வேதகால சம்ஸ்க்ருதத்தில் காணப்படுகின்றன. அவற்றை பற்றி அறிந்து கொண்டால் போதும் அதிகம் நாம் அவற்றை பயன்படுத்துவதில்லை.

அநுஸ்வர மற்றும் விசர்க எழுத்துக்களின் உச்சரிப்பு அது கூட வரும் மெய்யெழுத்தினை பொருத்து மாறும். நாம் அவற்றை பிறகு காண்போம்.

அடுத்த பாடத்தில் மெய்யெழுத்துக்களை பற்றி காண்போம்

No comments:

Post a Comment