Monday, July 13, 2009

அறிமுகம்

வணக்கம்,

வடமொழி அல்லது சம்ஸ்க்ருதம் ஒரு பொக்கிஷ கடல். அதனை படித்து அதனுள் மூழ்கினால் நாம் பல முத்துக்களை எடுக்கலாம். கடலை பற்றி கற்க நாம் அதில் பயணிக்க வேண்டும் அதற்கு ஒரு நல்ல கலம் வேண்டும். கலம் மிக பலம் வாய்ந்ததாகவும் நமக்கு பழக்கபட்டதாகவும் இருக்க வேண்டும். அந்த கலம் நம் தாய்மொழியாகிய தமிழை தவிர வேறு எந்த மொழியாக இருக்க முடியும். ஆங்கிலம் மூலம் சமஸ்க்ருதம் கற்க எத்தனையோ தளங்கள் இருகின்றன, ஆனால் தமிழ் மூலம் வடமொழியை கற்பிக்க இது ஒரு சிறு முயற்சி. நான் சமஸ்க்ருதம் முழுதும் அறிந்த பண்டிதன் அல்ல. நான் பதினொன்று , பன்னிரெண்டாம் வகுப்பினில் சம்ஸ்க்ருதம் மொழி பாடமாக படித்தேன். நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக தற்பொழுது சம்ஸ்க்ருதத்தை பல ஆங்கில நூல்களின் மூலம் படித்து வருகிறேன். நான் படித்தவற்றை தமிழில் சொல்ல விரும்பி எல்லாம் வல்ல இறைவனின் துணையோடு இந்த பதிவை ஆரம்பித்துள்ளேன்.

1 comment:

  1. நமஸ்தே ராம குமரன்
    தங்கள் வலைப்பதிவு 'வடமொழி கற்போம்' நோட்டமிட்டேன். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
    எனது வலைப்பதிவான www.vedantavaibhavam.blogspot.com -ஐ பார்வையிடுங்கள். அதில் சமஸ்க்ருதம் பற்றி இரண்டு இடுகைகள் உள்ளன.
    அன்புடன்
    -அஷ்வின்ஜி

    ReplyDelete