Friday, August 7, 2009

அநுநாஸிக மற்றும் விசர்கத்தின் சிறப்புகள்

நாம் மெய்யெழுத்துக்களை பார்த்தப்பொழுது क, च , ट, त , प (க,ச,ட,த,ப) என்ற ஒவ்வொரு வரிசையின் இறுதியிலும் அநுநாஸிக என்ற எழுத்துக்களை பார்த்தோம் அவை முறையே ङ , ञ, ण , न, म‌ (ங,ஞ,ந,ன,ம) இவை ஏன் ஒவ்வொரு வரிசையின் இறுதியிலும் வந்துள்ளன , இந்த வரிசை எழுத்துக்களை சேர்த்து ஒரு வரிசை உருவாக்கியிருக்கலாமே என்று நமக்கு தோன்றும். இப்படி முறைப்படுத்தப்பட்தற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு வரிசை எழுத்துக்களையும் உச்சரிக்கும் பொழுது நாக்கு அதே இடத்தில் தான் இருக்கும் அதே போல அந்த வரிசைக்குறிய அநுநாஸிக எழுத்தை உச்சரிக்கும்பொழுதும் நாக்கு அதே இடத்தில் இருப்பதுடன் மூக்கில் இருந்து வரும் ஒலியும் சேர்ந்துக் கொள்ளும்.

ஒவ்வொரு அநுநாஸிக எழுத்தும் அந்த வரிசையிலுள்ள உயிர்மெய் எழுத்துகளுடன் மட்டுமே கூடி வரும்

ஒரு உதாரணம் காண்போம் सञ्चार‌(ஸ‌ஞ்சார) (च(ச) வரிசையில் உள்ள ञ‌(ஞ) அநுநாஸிக எழுத்து च(ச¹) உயிர்மெய்யுடன் சேர்ந்து வந்திருக்கிறது) என்பதே சரி सन्सार(ஸ‌ன்சாரம்) सण्सार‌(ஸ‌ந்சாரம்) என்பது தவறு.

மேலும் சில உதாரணங்கள்

अङ्क ( அங்க) அங்கம், உறுப்பு
शङ्कर (ஷ‌ங்கர)
पञ्च (பஞ்ச) ஐந்து
कण्ठ (கந்ட) கழுத்து

எந்த வார்தையின் இறுதியிலும் ம் என்ற எழுத்தை இணைக்க நாம் வார்த்தையின் கடைசி உயிர்மெய்மீது புள்ளி வைத்துக் குறியிடலாம், அதேநேரம் வார்த்தையின் நடுவே வரும் ம் என்ற எழுத்தை பாதி ம கொண்டே குறிக்க வேண்டும்

உதாரணம்
किं (கி¹ம்) எந்த , எதனை
मां (மாம்) என்னை

விசர்கத்தின் பயனைக் காண்போம்


விசர்க எழுத்து ( : ) ஒரு உயிருடன் சேர்ந்து வரும்பொழுது ஹ என்னும் ஒலியை தருகிறது
உதாரணம்
க்+: = கஹ என்னும் ஒலி கிடைக்கிறது. இது போல எல்லா உயிர்களுடனும் விசர்கம் சேர்ந்து உயிர்+ ஹ என்ற ஒலியைத் தருகிறது.
बालक: (பா³லக¹:) சிறுவன் இதன் உச்சரிப்பு பாலகஹ என்பதாகும்.

ஆனால் ஒரு உயிர்மெய்யுடன் விசர்க சேர்ந்து வரும்பொழுது ஹ என்ற எழுத்து உயிரெழுத்தின் ஓசையை உயிர்மெய்யுடன் இணைக்கிறது.

உதாரணம் कवि: (க¹வி:) கவிஞர் இதில் உள்ள விசர்கமானது (வி=வ் + இ) என்ற எழுத்தில் வரும் இகாராத்தால் பாதிக்கப்பட்டு ஹ என்ற ஒலியை தருவதற்கு பதிலாக ஹி என்ற ஒலியைத் தருகிறது. க¹விஹி என்பதே இந்த வார்தையின் ஒலி க¹விஹ அல்ல‌

कवे: (க¹வே:)-கவிஞருடைய‌ கவேஹே என்பதே இந்த வார்த்தையின் ஒலி கவேஹ அல்ல‌
गुरु: (கு³ரு:) கு³ருஹு என்பதே இந்த வார்த்தையின் ஒலி கு³ருஹ அல்ல‌

Thursday, August 6, 2009

உயிர்மெய் எழுத்துக்கள்







சம்ஸ்க்ருதத்தில் தமிழை போலவே உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் கலந்து உயிர்மெய்யெழுத்துகளாக விளங்குகின்றன. தமிழை போலவே ஒவ்வொரு மெய்யுடனும் ஒரு உயிரை சேர்த்து உயிர்மெய்யாக குறிக்க நாம் குறியீடுகளை பயன்படுத்துகிறோம். அந்த குறியீடுகளை பார்போம். நான் முன்பே உயிரெழுத்துகளை குறிக்க தமிழில் எழுத்தின் மேல் புள்ளி (எ.கா க்) உபயோகிப்பது போல சம்ஸ்க்ருதத்தில் எழுத்தின் கீழ் ஒரு கோடு இழுக்கபட்டிருக்கும் (எ.கா क् )

நாம் முதல் உயிரான क् (க்) உடன் குறிகளை இணைத்து பார்ப்போம். தமிழில் உகரத்திற்கும் ஊகரத்திற்கும் ஒவ்வொரு மெய்யிற்கும் தனித்தனி குறியீடுகள் உள்ளன ஆனால் சம்ஸ்க்ருதத்தில் எல்லா எழுத்துகளுக்கும் ஒரே உயிர்மெய் குறியீடுகள் மட்டுமே உள்ளது.






















வ்யஞ்சனம்ஸ்வரம்உயிர்மெய் குறியீடுஉயிர்மெய்யெழுத்துஉதாரணம்
क् (க்)अ‌(அ)कमलम् க¹மலம்(தாமரை)
क् (க்)(ஆ)काकाक: கா¹க¹:(காகம்)
क् (க்)इ‌ (இ)िकिकिरन:கி¹ரன:(கதிர்)
क् (க்)ई‌(ஈ)कीकीर: கீ¹ர: (கிளி)
क् (க்)उ‌(உ)कुकुकुर: கு¹கு¹ர: ( நாய்)
क् (க்)(ஊ)कूकूर्म:கூ¹ர்ம: (ஆமை)
क् (க்)(ரு)कृकृष्ण:க்¹ருஷ்ன: ( கருப்பு)
क् (க்)(ர்ரு)कॄकॄக்¹ர்ரூ (தெரிவிக்க)
क् (க்)(லு)कॢकॢप्त‌க்¹லுப்த ( ஒழுங்குமுறையில்)
क् (க்)(ல்லு)कॣ
क् (க்)(ஏ)केकेकावलाகே¹கா¹வலா ( மயில்)
क् (க்)(ஐ)कैकैरव‌கை¹ரவ ( சூதாடி)
क् (க்)ओ‌ (ஓ)कोकोकिला கோ¹கி¹லா ( குயில்)
क् (க்)(ஔ)कौकौमार‌:கௌ¹மார: (வாலிபன்)
क् (க்)अं (அ)कंभूकंप‌ பூ4க¹ம்ப ( பூகம்பம் )
क् (க்)अः‌ (அ)क: क: க: (யார் ஆன்பால்)


இதே போல ஒவ்வொரு மெய்யெழுத்தும் உயிர் குறிகளைக் கொண்டு உயிர்மெய்யாக எழுதப்படுகிறது.

இதில் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன‌

र् + उ (ர் + உ = ரு) என்னும் எழுத்து रु என்று எழுதப்படுகிறது
र् + ऊ (ர்+ஊ = ரூ) என்னும் எழுத்து रू என்று எழுதப்படுகிறது

द् + ऋ (த³ +ரு= த்ரு) என்னும் எழுத்து दृ என்று எழுதப்படுகிறது
ह + ऋ (ஹ+ரு=ஹ்ரு) என்னும் எழுத்து हृ என்று எழுதப்படுகிறது