Thursday, August 6, 2009

உயிர்மெய் எழுத்துக்கள்







சம்ஸ்க்ருதத்தில் தமிழை போலவே உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் கலந்து உயிர்மெய்யெழுத்துகளாக விளங்குகின்றன. தமிழை போலவே ஒவ்வொரு மெய்யுடனும் ஒரு உயிரை சேர்த்து உயிர்மெய்யாக குறிக்க நாம் குறியீடுகளை பயன்படுத்துகிறோம். அந்த குறியீடுகளை பார்போம். நான் முன்பே உயிரெழுத்துகளை குறிக்க தமிழில் எழுத்தின் மேல் புள்ளி (எ.கா க்) உபயோகிப்பது போல சம்ஸ்க்ருதத்தில் எழுத்தின் கீழ் ஒரு கோடு இழுக்கபட்டிருக்கும் (எ.கா क् )

நாம் முதல் உயிரான क् (க்) உடன் குறிகளை இணைத்து பார்ப்போம். தமிழில் உகரத்திற்கும் ஊகரத்திற்கும் ஒவ்வொரு மெய்யிற்கும் தனித்தனி குறியீடுகள் உள்ளன ஆனால் சம்ஸ்க்ருதத்தில் எல்லா எழுத்துகளுக்கும் ஒரே உயிர்மெய் குறியீடுகள் மட்டுமே உள்ளது.






















வ்யஞ்சனம்ஸ்வரம்உயிர்மெய் குறியீடுஉயிர்மெய்யெழுத்துஉதாரணம்
क् (க்)अ‌(அ)कमलम् க¹மலம்(தாமரை)
क् (க்)(ஆ)काकाक: கா¹க¹:(காகம்)
क् (க்)इ‌ (இ)िकिकिरन:கி¹ரன:(கதிர்)
क् (க்)ई‌(ஈ)कीकीर: கீ¹ர: (கிளி)
क् (க்)उ‌(உ)कुकुकुर: கு¹கு¹ர: ( நாய்)
क् (க்)(ஊ)कूकूर्म:கூ¹ர்ம: (ஆமை)
क् (க்)(ரு)कृकृष्ण:க்¹ருஷ்ன: ( கருப்பு)
क् (க்)(ர்ரு)कॄकॄக்¹ர்ரூ (தெரிவிக்க)
क् (க்)(லு)कॢकॢप्त‌க்¹லுப்த ( ஒழுங்குமுறையில்)
क् (க்)(ல்லு)कॣ
क् (க்)(ஏ)केकेकावलाகே¹கா¹வலா ( மயில்)
क् (க்)(ஐ)कैकैरव‌கை¹ரவ ( சூதாடி)
क् (க்)ओ‌ (ஓ)कोकोकिला கோ¹கி¹லா ( குயில்)
क् (க்)(ஔ)कौकौमार‌:கௌ¹மார: (வாலிபன்)
क् (க்)अं (அ)कंभूकंप‌ பூ4க¹ம்ப ( பூகம்பம் )
क् (க்)अः‌ (அ)क: क: க: (யார் ஆன்பால்)


இதே போல ஒவ்வொரு மெய்யெழுத்தும் உயிர் குறிகளைக் கொண்டு உயிர்மெய்யாக எழுதப்படுகிறது.

இதில் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன‌

र् + उ (ர் + உ = ரு) என்னும் எழுத்து रु என்று எழுதப்படுகிறது
र् + ऊ (ர்+ஊ = ரூ) என்னும் எழுத்து रू என்று எழுதப்படுகிறது

द् + ऋ (த³ +ரு= த்ரு) என்னும் எழுத்து दृ என்று எழுதப்படுகிறது
ह + ऋ (ஹ+ரு=ஹ்ரு) என்னும் எழுத்து हृ என்று எழுதப்படுகிறது

3 comments:

  1. படிப்பதற்கு எளிதாக, பின்புலக் கருமை வண்ணத்தை மாற்றுங்கள். கருமைப் பின்புலத்தில், நீலம், சிவப்பு இந்த வண்ணங்களில் படிப்பதற்கு கொஞ்சம் சிரமப் பட வேண்டும். முடியுமானால், உச்சரிப்புத் தெளிவுக்காக, ஆடியோ சேர்த்துக் கொண்டால் கற்றுக் கொள்ள இன்னும் எளிதாக இருக்கும்.

    நன்றி

    ReplyDelete
  2. அன்புள்ள கிருஷ்னமூர்த்தி,

    தங்கள் கருத்துக்கு நன்றி, கருப்பு பேக்கிரவுண்ட் ஏனென்றால் வெள்ளை நிறத்தை மானிட்டரில் காண்பிப்பதை விட கருப்பு நிறத்தை காண்பிக்க குறைந்த அளவு மின்சாரம் தேவைப்படும்.

    இதை பற்றி அறிந்துக் கொள்ள‌
    http://ecoiron.blogspot.com/2007/01/black-google-would-save-3000-megawatts.html

    இதனை மறுக்கும் ஆராய்ச்சி ஒன்றும் நடந்திருக்கிறது , ஆனால் அதுவும் பழைய மானிட்டரில் கருப்பே மின்சக்தி பயன்பாட்டை குறைக்கிறது என்று ஒப்புக்கொண்டுள்ளது.
    http://www.earthascope.com/once-you-go-black-you-might-still-go-back-to-google/

    இந்த வண்ணங்கள் படிக்க ஏதுவாக உள்ளதா என்று தெரிவியுங்கள்.

    நன்றி,
    ராம்குமரன்

    ReplyDelete
  3. Padikka ethuvaaga ullathu thiru Ramkumaran avargale. Naan tharpoluthu thaan padikka aarambithullen. migavum ubhayogamaana pathivu. Nandrigalai kaanikkai aakkugindren.

    ReplyDelete